“யாரும் எதிர்பார்க்காத தீபாவளி பரிசு!” விவசாயிகள் முகத்தில் சிரிப்பை வரவழைத்த முதல்வர் விஜய்!
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார். இதன்மூலம், 85,000 விவசாயிகள் பயன்பெறுவர்

கரும்பு விவசாயிகளுக்குக் கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50-ஐ விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விடுவிப்பதை முதலமைச்சர் விஜய் விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கித் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (4.11.2026) தலைமைச் செயலகத்தில் கரும்பு விவசாயிகளின் நலன் காத்திடும் வகையில், சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தபடி கருப்பு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50-ஐ விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விடுவிப்பதைத் தொடங்கி வைக்கும் விதமாக 3 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
85,000 கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்
அந்த வகையில், கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் கரும்பு உற்பத்தியை அதிகரிக்கவும். சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்து 2025-26 அரவைப் பருவத்திற்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்குக் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் 10.8.2026 அன்று சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்ததைத் தொடர்ந்து, அதனைத் தொடங்கி வைத்திடும் விதமாக இன்று 3 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 85,000 கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர். இதற்காக நடப்பு ஆண்டில் 603 கோடியே 33 இலட்சம் ரூபாய் அரசுக்குக் கூடுதல் செலவினம் ஏற்படும்.
ட்ரெண்டிங் செய்திகள்





















