மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு பருத்தி அதிக விலைக்கு ஏலம் போனது. இதனை அடுத்து கோடை பருத்தி சாகுபடி சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது மாவட்டம் முழுவதும் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பருத்தியை கொள்முதல் செய்ய மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில், சீர்காழி ஆகிய நான்கு இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலமும், கூடுதலாக மாயூரம் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை மூலம் மயிலாடுதுறையில் பருத்தி மூட்டைகள் விற்பனை மறைமுக ஏல முறையில் நடைபெற்று வருகிறது. 




இந்நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை குத்தாலத்தில் பருத்தி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பாதுகாப்பு இல்லை என்று கூறி தேனி, மதுரை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  இருந்து வந்திருந்த பருத்தி வியாபாரிகள், ஏலத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடந்த 6 நாட்களாக விவசாயிகளிடம் பருத்தி கொள்முதல் செய்யப்படாமல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் மாயவரம் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை ஆகியவற்றில் விவசாயிகள் தங்கள் கொண்டு வந்த பருத்தியுடன் காத்துக் கிடந்தனர். 


Vengal Rao : பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ், ஐசியூவில் அனுமதி.. அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது?




அதனைத் தொடர்ந்து இருதரப்பு இடையே குத்தாலத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.  அதில் இருதரப்பும் சமரசம் ஆனது. அதனை அடுத்து மீண்டும் பருத்தி ஏலத்தில் பங்கேற்க வெளி மாவட்ட வியாபாரிகள் முடிவு செய்தனர். பின்னர் மாயூரம் கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில் இரவு துவங்கிய பருத்தி ஏலம் நள்ளிரவு வரை நடைபெற்றது. சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 டன் பருத்தி ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டது.




இதனிடையே மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த இரண்டு மாத காலமாக கொள்முதல் செய்யப்பட்ட உளுந்து மற்றும் பயிருக்கு அரசு பணம் ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறி விவசாயிகள் மற்றும் தனியார் வியாபாரிகள் அங்கிருந்த பயிர் மூட்டைகளை திரும்ப எடுத்துச் செல்ல முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து அதிகாரிகள் விரைவில் கொள்முதலுக்கான பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் திரும்பி சென்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண