மேலும் அறிய
Madurai ; உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை தொடர்ந்து உச்சத்தில் நீடிக்கிறது.. காரணம் என்ன?
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் கடந்த வாரம் வரை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆன மல்லிகை நேற்று 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

மல்லிகைப் பூ
உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை தொடர்ந்து உச்சத்தில் நீடிக்கிறது - மல்லிகை கிலோ 7000 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை உசிலம்பட்டி பகுதியில் பூக்கள் விலை ஏற்றம்
பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைவு மற்றும் பண்டிகை காலங்களில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் கடந்த வாரம் வரை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆன மல்லிகை நேற்று 12 ஆயிரம் ரூபாய்க்கும், இன்று 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இதே போல் முல்லை 1200 ரூபாய்க்கும், கனகாம்பரம், காக்கரட்டான் உள்ளிட்ட பூக்கள் 1000 ரூபாய்க்கும், பிச்சி 500, மரிக்கொழுந்து 250, பட்டன் ரோஸ் 200, அரளி 150, சம்மங்கி, செவ்வந்தி, பன்னீர் ரோஸ் 100 ரூபாய்க்கும், கோழிக் கொண்டை 60 ரூபாய்க்கும், துளசி 50 ரூபாய்க்கும் விற்பனை ஆகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்., பொங்கல் பண்டிகை நெறுங்கும் நிலையில் மேலும் பூக்களின் விலை கூடும் என தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















