மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலை குறித்து காணலாம்.

சித்திரைத் திருவிழா 2026
 
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் திருவிழாக்களில் முதன்மையாய் திகழ்வது சித்திரைத் திருவிழா. வருகின்ற நாளை மறுநாள் 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.  மீனாட்சி திருக்கல்யாணம் பட்டாபிஷேகம் என களைகட்ட உள்ள இந்த திருவிழாவில், ஏப்ரல் 29ஆம் தேதி அம்மன் சுவாமி தேர்கள் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வகையில் திருத்தேரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் தேரோட்ட உற்சவத்தில் சாதி சமய பாகுபாடு இன்றி அனைத்து மக்களும் வடம் பிடித்து இழுத்து மகிழ்வது வழக்கம். தற்போதே திருவிழாவிற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலை குறித்து காணலாம்.
 
பூக்களின் இன்றைய விலை நிலவரம் 
 
மதுரை மல்லிகைப் பூ மதுரை மல்லிகைப் பூவிற்கு எப்போதும் தனி மணம், அடர்த்தி, அடர்வெண்மை உள்ளிட்டவையால் அதிகம் விரும்பப்படுகிறது. இதனால் முகூர்த்தம் இல்லாத நாட்களில் கூட மதுரை மல்லிகைப் பூ விலை அதிகமாக இருக்கும். இந்நிலையில் இன்று மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்: (17.04.2026) காணலாம்.
 
  * மதுரை மல்லி கிலோ ரூ.350,    * பிச்சிப் பூ கிலோ ரூ.500,
 
  *  முல்லைப் பூ  கிலோ ரூ.200,   *  செவ்வந்திப் பூ கிலோ ரூ.200,
 
 *  சம்பங்கிப் பூ கிலோ ரூ.20,   *  செண்டு மல்லிப் பூ கிலோ ரூ.30,  
 
*  கனகாம்பரம்  கிலோ ரூ.200,   *   பன்னீர் ரோஸ் கிலோ ரூ.100,
 
*  பன்னீர் ரோஸ் கிலோ ரூ.100,    *  அரளி கிலோ ரூ.100,