கரூர் விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகளிடம் கோரிக்கை மனுபெற்ற 18 பயனாளிகளுக்கு ரூபாய் 17 லட்சம் மதிப்பில் ஆன அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது, “வடசேரி பள்ளி வளாகத்தின் நடுவில் தாள்வாக செல்லும் விண்வெளி தடம் மாற்றி அமைக்கப்படும். ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் மரக்கன்றுகள் நடப்படும்.




அதே பகுதியில் உள்ள கிராமத்தில் பழுதடைந்த பள்ளி கட்டடங்களை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயத்திற்கு தேவையான வண்டல் மண் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூனம்பட்டி கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பயன்பெறும் வகையில் ஆவின் பாலகம் அமைத்து தரப்படும். வளையல் காரன் புதூர் பகுதி எரி குளங்களை தூர்வாரி கொடுப்பது, கீழே வெளியூரில் இடுகாட்டுக்கு செல்ல தார் சாலை அமைத்து தருவது, பணிக்கம்பட்டியில் கிளை நூலகம் அமைக்க வேண்டும்” என்றார். கலெக்டரிடம் விவசாயிகள் 84 பேர் மனு அளித்தனர். பின்னர், வேளாண்மை உழவர் நலத்துறையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூபாய் 2000 மதிப்பீட்டில் விசைத்தெளிப்பான் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூபாய் 3680 மதிப்பீட்டில் கொய்யா பரப்பு விரிவாக்கம், ஒருவருக்கு ரூபாய் 4800 மதிப்பீட்டில் நெல்லி பரப்பு விரிவாக்கம்,




கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மூன்று அடுக்கு அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு திட்டம் சார்பில் 14 பேருக்கு தலா ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் ரூபாய் 16,80,000 மதிப்பீட்டில் கரவை மாடு, வங்கி கடனுதவி என்ற மொத்தம் 16 லட்சத்து 91 ஆயிரத்து 127 மதிப்பீட்டில் அரசு நடத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர்கள் கவிதா ஜெயராணி இயக்குனர் சிவசுப்பிரமணியன் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ஓவிய ர் ரூபினா புஷ்பா தேவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமா மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.