இருக்கண்குடி நீர்த்தேக்க மீன்பாசி குத்தகை உரிமைக்கு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தகவல்.
மீன்பாசி குத்தகை உரிமைகளை 5-ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கண்குடி நீர்த்தேக்கத்தின் மீன்பாசி குத்தகை உரிமைகளை 5-ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, குறைந்தபட்ச குத்தகைத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இருக்கண்குடி நீர்த்தேக்கத்தின் மீன்பாசி குத்தகை உரிமை
எதிர்வரும் 21.07.2026-அன்று நடைபெறவுள்ள இருக்கண்குடி நீர்த்தேக்கத்தின் மீன்பாசி குத்தகை உரிமையை குத்தகைக்கு எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தொடர்புடைய விவரங்களை www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் 06.07.2026 முதல் 20.07.2026 வரையிலான காலங்களில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, adfisheriesvnr@gmail.com, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், செயல்படும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு உரிய விவரங்களைப் பெறறுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.
