மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா அடுத்த தொடங்க இருப்பதால் அச்சமயம் அனைத்து பூக்களின் விலை கூடுவதற்கு வாய்ப்பு உண்டு.

சித்திரைத் திருவிழா 2026
 
சித்திரைத் திருவிழா 2026  உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் திருவிழாக்களில் முதன்மையாய் திகழ்வது சித்திரைத் திருவிழா. வருகின்ற நாளை 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மீனாட்சி திருக்கல்யாணம் பட்டாபிஷேகம் என களைகட்ட உள்ள இந்த திருவிழாவில், ஏப்ரல் 29ஆம் தேதி அம்மன் சுவாமி தேர்கள் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வகையில் திருத்தேரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் தேரோட்ட உற்சவத்தில் சாதி சமய பாகுபாடு இன்றி அனைத்து மக்களும் வடம் பிடித்து இழுத்து மகிழ்வது வழக்கம். தற்போதே திருவிழாவிற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலை குறித்து காணலாம்.
 
 பூக்களின் இன்றைய விலை நிலவரம்    
 
மதுரை மல்லிகைப் பூ மதுரை மல்லிகைப் பூவிற்கு எப்போதும் தனி மணம், அடர்த்தி, அடர்வெண்மை உள்ளிட்டவையால் அதிகம் விரும்பப்படுகிறது. இதனால் முகூர்த்தம் இல்லாத நாட்களில் கூட மதுரை மல்லிகைப் பூ விலை அதிகமாக இருக்கும். இந்நிலையில் இன்று மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்: (18.04.2026) காணலாம்.
 
மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:
 
மதுரை மல்லி கிலோ ரூ.400, பிச்சி ரூ.300,
 
முல்லை ரூ.200, செவ்வந்தி ரூ.200,
 
சம்பங்கி ரூ.60, செண்டு மல்லி ரூ.40,
 
கனகாம்பரம் ரூ.500 , ரோஸ் ரூ.250,
 
பட்டன் ரோஸ் ரூ.150, பன்னீர் ரோஸ் ரூ.250,
 
கோழிக்கொண்டை ரூ.60, அரளி ரூ.70, 
 
மரிக்கொழுந்து ரூ.60, தாமரை (ஒன்றுக்கு) ரூ.4 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
4 டன் வரத்து
 
உற்பத்தி அதிகமாக உள்ளதால் தற்போது நாளொன்றுக்கு 4 டன் வரத்து உள்ளது. விசேஷ காலம் எதுவும் இல்லை என்பதால் பூக்கள் விலை குறைவாக உள்ளது. மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா அடுத்த தொடங்க இருப்பதால் அச்சமயம் அனைத்து பூக்களின் விலை கூடுவதற்கு வாய்ப்பு உண்டு. மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன்.